Saturday, 4 August 2012

தேவனே நான் உமது அண்டையில் 
இன்னும் நெருங்கி 
சேர்வதே என் ஆவல் பூமியில் [2] 

மாவலிய கோரமாக வன்சிலுவை மீதினில் நான் 
கோவே தொங்க நேரிடினும்
ஆவலால் உன் அண்டை சேர்வேன் [தேவனே]

யாக்கோபைப் போல் போகும் பாதையில்
பொழுதுபட்டு இராவினிருள் வந்து மூடிட
தூக்கத்தால் நான் கல்லில் சாய்ந்து
தூங்கினாலும் என் கனாவில்
நோக்கி உம்மை கிட்டி சேர்வேன் 
வாக்கடங்கா நல்ல நாதா - [தேவனே]

பரத்துக்கேறும் படிகள்போலவே என்பாதை தோன்ற 
பண்ணும் ஐயா என்தன் தேவனே 
கிருபையாக நீர் எனக்கு தருவதெல்லாம் 
உமது அண்டை அருமையாய் என்னை அழைத்து 
அன்பின் பூரணமாக செய்யும் [தேவனே]

No comments:

Post a Comment