Saturday, 4 August 2012

என் இதயம் யாருக்கு தெரியும் 
என் வேதனை யாருக்கு புரியும் 
என் தனிமை என் சோர்வுகள்
" யார் என்னைத் தேற்றுவார் " (4 ) - என் இதயம்

நெஞ்ஜில் நோவுகள் அதை மிஞ்சும் பாரங்கள் -2
தஞ்சம் இன்றியே நெஞ்சம் ஏங்குதே
நெஞ்சம் ஏங்குதே - என் இதயம்

சிறகு ஒடிந்த பறவை அது வானில் பறக்குமோ -2 
உடைந்த உள்ளமும் ஒன்று சேருமோ
ஒன்று சேருமோ - என் இதயம்

அங்கே தெரியும் வெளிச்சம் அது கலங்கரை தீபமோ -2
இயேசு ராஜனின் முகத்தின் வெளிச்சமே 
முகத்தின் வெளிச்சமே 

என் இதயம் இயேசுவுக்கு தெரியும் 
என் வேதனை இயேசுவுக்கு புரியும் 
என் தனிமை என் சோர்வுகள்
" இயேசு என்னைத் தேற்றுவார் " (4 ) - என் இதயம்

No comments:

Post a Comment