Saturday, 4 August 2012

தந்தானைத் துதிப்போமே திருச் 
சபையோரே கவி பாடிப்பாடி.

விந்தையாய் நமக்கனந்தனந்த மான 
விள்ளற்கரிய தோர் நன்மை மிக மிக

ஓய்யாரத்துச் சீயோனே நீயும் 
மெய்யாகக் களிகூர்ந்து நேர்ந்து
ஐயனேசுக் குனின்கையைக் கூப்பித்துதி 
செய்குவையே மகிழ்கொள்ளுவையே நாமும் 

காண்ணாரக் களித்தாயே -நன்மைக் 
காட்சியைக் கண்டு ருசித்துப் புசித்து
எண்ணுக்கடங்காத எத்தனையோ நன்மை 
இன்னு முன்மெற் சோனா மாரிபோற்பெய்துமே

சுத்தாங்கத்து நற்சபையே உனை 
முற்றாய்க் கொள்ளவே அலைந்து திரிது 
சத்துக் குலைந்துனைச் சத்தி யாக்கத்தமின் 
ரத்தத்தைச் சிந்தி எடுத்து உயிர்வரம்

தூரந்திரிந்த சீயோனே உனை 
தூக்கி எடுத்துக் கரத்தினிலேந்தி 
ஆரங்கள் பூட்டி யலங்கரித்து உன்னை 
அத்தன் மணவாட்டி யாக்கினது என்னை 

சிங்காரக் கன்னிமாரே உம் 
அலங்கார கும்மியடித்துப் படித்து 
மங்காத உன் மணவாளன் யேசுதனை 
வாழ்த்தி வாழ்த்தி ஏத்திப்பணி ந்திடும்

No comments:

Post a Comment